முன்னாள் கிரிக்கெட் கெப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டில்ஷான் தனது முதல் திருமணத்தின் போது கிடைத்த குழந்தையின் ஆயுள் காப்புறுதிக்காக 3 வருடங்கள் வழங்க வேண்டிய பணத்தொகை மற்றும் மாதாந்த பராமரிப்புத் தொகையினை வழங்கத் தவறியமைக்கான வழக்கில் போலியான முகவரியினை குறிப்பிட்டுள்ளதாக நேற்று (10) கொழும்பு – 09 நீதவான் நீதிமன்றில் வெளிச்சமாகியது.
நீதிமன்ற நிதிநிலை அழைப்பானையினை அனுப்பிய போதே இப்போலி முகவரி சிக்கியதாக கூறப்படுகின்றது.
மேலும், டில்ஷான் மாதாந்த பராமரிப்பு பணமாக 20,000 மற்றும் 03 ஆண்டு ஆயுள் காப்பீடு கட்டணம் வழங்கத்தவரியுள்ளார்.
இவ்வழக்கானது தில்ஷானின் முன்னாள் மனைவியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கானது ஜூலை – 9ஆம் திகதி மீள் விசாரணைக்காக தள்ளப்பட்டுள்ளது.