1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் உணவு விற்பனை கொள்கை மற்றும் விவசாய பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
அதேவேளை இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலையும் குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.