இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடந்தது.
இதில் இலங்கை வீரர் குணத்திலக, இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து பிடித்த ’கேட்ச்’ ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தது. இதனால் அவர் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 305 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
