ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டில் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.