துப்பாக்கிதாரிகள் தாக்குதலை ஆரம்பித்திருந்தபோது சிக்கியிருந்த, சில வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலான 20 பணயக்கைதிகளை, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள உணவகமொன்றினுள் புகுந்த பொலிஸார், அவர்களை மீட்டுள்ளனர்.
தங்களது கொமாண்டோக்கள் உணவகத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், தீவிரமான துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் வேகமான நடவடிக்கை பற்றாலியன் படையின் பிரதி பணிப்பாளர் மிசனூர் ரஹ்மான் புஹியான் இன்று சனிக்கிழமை (02) தெரிவித்துள்ளார்.
மேற்படித் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, கபே மீதான தாக்குதலில் இறந்தவர்கள் என புகைப்படங்களை பிரசுரித்துள்ளது. குறித்த கபேயில், றைபிள், கிரனேட் தரித்த எட்டு அல்லது ஒன்பது ஆயுததாரிகள் கபேயில் இருப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டாக்காவின் குல்ஷான் மாவட்டத்திலுள்ள, வெளிநாட்டவர்களிடையே பிரபலமான ஹொலே அரிஸ்டன் உணவகத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு ஒன்பது மணிக்கு, துப்பாக்கிதாரிகள் தாக்குதலை ஆரம்பித்திருந்த]தாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
24 பேர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தெரிவித்துள்ள நிலையில், இதை மறுத்துள்ள பங்களாதேஷ் பொலிஸார், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பணயக்கைதிகளில், இத்தாலியர்களும் இந்தியர்களும் இருப்பதாக, விரைவு நடவடிக்கை பற்றாலியனின் கட்டளைப் பணியகத்திலுள்ள அதிகாரி தெரிவித்ததோடு, ஏழு இத்தாலியர்கள் பணயக்கைதிகளாக இருந்ததாக இத்தாலிய அரச தொலைக்காட்சிக்கு பங்களாதேஷுக்கான இத்தாலிய தூதுவர் மரியோ பல்மா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் இரண்டு இலங்கையர்களும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நேற்றுக் காலையில், இந்து பூசாரி ஒருவர், டாக்காவுக்கு தென்மேற்காகவுள்ள ஜீஹின்னைடா மாவட்டத்திலுள்ள கோயிலொன்றில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.