போர்ச்சுகல் நாட்டில் உள்ள போர்த்துகீசிய கிராமம் ஒன்றில், குழந்தை விகிதம் குறைந்து வருவதால், அந்த கிராமத்தில் பெற்றொடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கும் 5000 யூரோ வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு ஸ்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள அல்கோடியம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளில், மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, போர்ச்சுகல் நாட்டில் 0.9 விகிதமாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இது, ஐரோப்பிய ஒன்றியத்தில் தேசிய அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாக அந்நாட்டு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
போர்ச்சுகலில் அதிகப்படியான பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அல்கோடியம் இளைஞர்கள் தினமும் நிறைய பிரச்சினைகளை கையாள வேண்டியுள்ளது.
இதனால், அங்குள்ள ஆணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தால் பல தம்பதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.