இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எட்கா என்ற பொருளதார ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து பேச்சு நடத்த இலங்கையும் இந்தியாவும் உடன்பட்டுள்ளன.
இந்திய செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது.
இந்தப்பேச்சுவார்த்தையை இந்த வருடத்துக்குள் நிறைவு செய்வது என்றும் இரண்டு நாடுகளும்இணங்கியுள்ளன.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் இது தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்துள்ளார் இரண்டு அமைச்சர்களும் எட்கா உடன்படிக்கையின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தநிலையில், இந்தியக்குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இந்த உடன்படிக்கைக்கு எதிராக அரச மருத்துவர் சம்மேளனம் நேற்று அடையாள புணிப்புறக்கணிப்பு ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.