பிணைமுறிகள் விவகாரம் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் இரகசியத்தை தான் காப்பேன் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
அறிக்கை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் கலந்துரையாடுவேன் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில், கண்காய்வாளர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கடைப்பிடிப்பேன் என்று தெரிவித்த சபாநாயகர், இந்த விவகாரம் தொடர்பில் பொது கணக்குகள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
( நன்றி – கனகலிங்கம் கோபிகிருஷ்ணா )