பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மீகாதென்ன பொலிஸாரால் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மீகாதென்ன பாடசாலை ஒன்றில் பத்து மாணவர்களை பலவந்தமாகமுதலாந் தரத்திற்கு சேர்த்துக் கொள்ள வைத்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவருடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த, இதனுடன் தொடர்புடைய பெற்றோர் 10 பேர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர் கைது செய்யப்படுவது குறித்து சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வரும்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெற்றோர் 10 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில்ஆஜர்படுத்தவுள்ளதாக மீகாதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.