கூட்டு எதிர்க் கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று கூடுகிறது

கூட்டு எதிர்க் கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று (07) முதற் தடவையாக கூடுகின்றது.

இதன்போது, நிழல் அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ரஞ்ஜித் டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியின் அரசாங்கம் அமையும் போதும் தற்பொழுது வழங்கப்படப் போகும் அமைச்சே அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டமொன்றும் இன்று நண்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சுக்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைக் கண்காணிப்பதற்கு கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட அமைச்சுக்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ளனர். இதனைக் கூட்டு எதிர்க் கட்சியே உத்தியோகப்பற்றற்ற முறையில் அமைத்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.