ரமித் ரம்புக்வெல்ல இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட காரணம் அம்பலமானது..

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இங்கிலாந்துடன் நேற்று முன்தினம் நடந்த 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் தீர்மானம் ஒன்றே அவர் போட்டிக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்ட ரமித ரம்புக்வெல்ல, அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில், திடீரென அவர் நேற்று அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியில் இணைந்து கொள்ள இணக்கம் தெரிவித்ததன் பலனாகவே ரமித போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டதாக கிரிக்கெட் துறையில் ஒரு வதந்தி பரவியது.

ரமி தேசிய போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தாத நிலையில், தேசிய அணியில் இணைத்து கொள்ளப்பட்டமை குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டது.