இந்தியாவின் பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஸாகிர் நாயிக் குறித்து ஆய்வு செய்ய ஒன்பது குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷ், டாக்கா தாக்குதலுக்கு பின்னர் ஸாகிர் நாயிக் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஸாகிர் நாயிக் உரைகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஸாகிர் நாயிக்கின் உரைகள் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதா என்பது பற்றிய ஆய்வு செய்யப்படும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
அதற்கமைய இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை, உள்துறை அமைச்சக குழு உள்ளிட்ட 9 குழுக்கள் ஸாகிர் நாயிக்கின் உரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 குழுக்கள் ஸாகிர் நாயிக்கின் உரைகள் குறித்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும், 3 குழுக்கள் அவரின் சமூக வலைதள பதிவுகள் மற்றும் செயல்பாடுகளையும் குறித்தும் கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.