பிரபல பாடகர் மிகா சிங் கைது

பிரபல பாடகரான மிகா சிங் இன்று இசை நிகழ்ச்சியொன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் 12-2015 திகதியன்று நிகழ்வொன்றின் போது வைத்தியரொருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து விசேட புலனாய்வில் இருந்த பொலிசாரால் இன்று மிகா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.