உதய கம்மன்பிலவின் தாக்கல் செய்த அடிப்படை மனு விசாரணைக்கு..

தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் விஷேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினருக்கு இது தொடர்பில் தகவல் வழங்குமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

போதுமான காரணங்கள் இன்றி தன்னைக் கைது செய்தமையால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், எனவே இதற்காக நஸ்டஈட்டை வழங்குமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவை எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் அனுமதியளித்துள்ளது என, எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.