வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி (முழு விவரம்)

வற் வரி விலக்களிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண விலைகள் இன்று (14) அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதன்படி நிர்ணய விலைகளாக;

01. மைசூர் பருப்பு  ரூபா. 169

02. நெத்தலி (தாய்) – ரூபா. 495

        நெத்தலி (துபாய்) – ரூபா. 410

03. கடலை – ரூபா. 260

04. பயறு – ரூபா. 220

05. கோதுமை மா – ரூபா. 87

06. முழு ஆடை பால் மா – (இறக்குமதி) – ரூபா. 810

        முழு ஆடை பால் மா – (உள்ளூர்) – ரூபா. 735

07. கோழி இறைச்சி -(தோலுடன்) – ரூபா. 410

       கோழி இறைச்சி -(தோலகற்றியது) – ரூபா. 495 

08. உருளைக்கிழங்கு -(இறக்குமதி) – ரூபா. 120

09. பெரிய வெங்காயம் -(இறக்குமதி) – ரூபா. 78

10. செத்தல் மிளகாய் – ரூபா. 385

11. கருவாடு கட்டா –  ரூபா. 110

12. கருவாடு சாலை –  ரூபா. 425

13. மாசி – ரூபா. 1500

14. சஸ்டோஜன் – ரூபா. 1500

15. சீனி – ரூபா. 95

தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் (480g) 140 ரூபாவுக்கும், (105g) 70 ரூபாவுக்கும் கடந்த காலத்தில் இருந்தது போன்றே பழைய விலைக்கு வழங்கப்படும்.

பாசிப்பயறு கடந்த காலங்களை விட 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு மாற்றமாக எவராவது செயற்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடெங்கும் இவற்றைக் கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.