பகிடிவதை விவகாரம் – களனி பல்கலைக்கழக மாணவர்களது விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் 8 மாணவர்களினதும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வரை இவர்களது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மஹர நீதவான் நீதிபதி மஹிந்த பிரபாத் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த 7 மாணவர்களும் கடந்த மே மாதம் 17ஆம் திகதி முதல் சிறைத்தண்டனை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று சந்தேகநபர்களை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் குறித்த  உத்தரவினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.