நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வற் வரி திருத்த சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் நிறைவேற்ற சந்தர்ப்பம் வழக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர் கட்சியினால் குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவு திட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள முறை இந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்படவில்லை என குறித்த மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெருபான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதால் இந்த சட்டமூலத்தையும் மூன்றில் இரண்டு பெருபான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது.