பார்படோஸில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு இருபது கர்பீன் பிரிமியர் லீக் இன்றைய போட்டியின் போது இரண்டு போட்டியாளர்கள் மோதுண்டு மைதானத்திலேயே சுருண்டு வீழ்ந்தனர்.
ஏ.பி.டி வில்லியஸின் துடுப்பாட்டத்தின் போது எதிர் அணியின் இரண்டு வீரர்கள் பந்தை பிடியெடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில் நேருக்கு நேர் ஜே.ஜே ஸ்மாட்ஸ் மற்றும் கிரான் பவவேல் மோதுண்டதினால் இந்த விபத்து நேர்ந்தது.
இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரான் பவவேல் வீரர் கடுமையாக பாதிப்படைந்ததுடன், இருவரும் உடனடியாக காவு வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில்,இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளி பதிவு இணைக்கப்பட்டுள்ளது…
[youtube url=”https://www.youtube.com/watch?v=dqdsUqRJ_98″ width=”560″ height=”315″]