குறைந்த வட்டியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடனுதவி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் 50 லட்சம் ரூபா கடனுதவியை வழங்குவது தொடர்பான யோசனை ஒன்று ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

சாதாரண பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிக்கு அறவிடப்படும் வட்டியை விட இரண்டு மடங்கு குறைவான வட்டி வீதத்தில் இருந்த கடனுதவி வழங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக ஏற்கனவே சில அரச வங்கிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவியை வழங்க வங்கிகள் தயக்கம் காட்டி வருவதாகவும் பேசப்படுகிறது.

இதன் காரணமாக வட்டியில் ஒரு தொகையை திறைசேரி மூலம் செலுத்த முடியுமா என்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் கூறுகின்றன