நஷ்டம் மற்றும் திறனற்று இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனம், லங்கா ஹொஸ்பிட்டல் மற்றும், சலுசல உட்பட பல அரச நிறுவனங்கள் இவ்வாறு சீரமைக்கப்படவுள்ளன.
மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், நஷ்டம் மற்றும் திறனற்று இயங்கும் நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகளைத் தேடி அறிந்து அவற்றை சரியான முறையில் நடத்திச் செல்லும் வேலைத்திட்டம் இதனூடாக முன்னெடுக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.