3வது தெற்காசிய டயஸ்போரா மாநாட்டிற்காக பிரதமர் சிங்கப்பூர் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று அதிகாலை 01.30 அளவில் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் அந்த நாட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, மூன்றாவது தெற்காசிய டயஸ்போரா மாநாட்டில் கலந்துகொள்வதே, ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் பிரதமரின் இந்த விஜயத்தின் போது, அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.