நீர்கொழும்பு பொது வைத்தியசாலை புனரமைக்கப்படும் – ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்தார்.

வைத்தியசாலையின் பிரதான கட்டிடத் தொகுதி தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காக அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 7 மாடி கட்டிட தொகுதியை அமைச்சர் பார்வையிட்டார்.

இதன் போது 300 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் சேதமடைந்த கட்டிடங்களை திருத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்