ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அவசரக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும், சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 7 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக, சுதந்திரகட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.