பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் ஜெஹான் முபாரக் 8 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணியானது, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வருகின்ற 17ம் திகதி முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது.
இதற்காக 16 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 34 வயதான ஜெஹான் முபாரக் 8 ஆண்டுகளுக்கு பிறகு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பானது.
கடந்த 2002ல் வங்கதேசத்துக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்டில் அறிமுகமான இவர், கடைசியாக 2007ல் இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்டில் விளையாடினார்.
நடுகள வரிசையில் அசத்தும் ஜெயவர்த்தனே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அந்த இடத்தில் பலத்தை அதிகரிக்க இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.