ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ப்லவர் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு ப்லவர் வீதிப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் நோக்கி ஆரப்பாட்டப் பேரணியாக சென்றவர்கள் பிரதமரின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.