கூட்டு எதிர்க்கட்சியின் நடைபவனிக்கு நீதிமன்ற உத்தரவைக் கோரி சதி – கெஹெலிய

அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்யும் நடைபவனியை நிறுத்துவதற்கான தடை உத்தரவை  பொலிஸ் அல்லது சிவில் மக்கள் ஆகியோரை வைத்து பெற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கு முகம்கொடுப்பதற்கு சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று(25) காலை 9.00 மணியிலிருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் புதுக்கடை நீதிமன்றத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.