கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸவுக்கு அரச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மூன்று கோடியே 47 இலட்சம் ரூபா பெறுமதியான விளம்பரங்களை இலவசமாக ஒளிப்பரப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தவிர மஹிந்த ராஜபக்ஸவுக்காக பல்வேறு நபர்கள் , கட்டணத்தை பின்னர் செலுத்தும் அடிப்படையில், 5 கோடியே 8 இலட்சத்து 82 ஆயிரத்து 675 ரூபா பெறுமதியான விளம்பரங்களை செய்துள்ளனர்.
இதில் 4 கோடியே 99 இலட்சத்து 66 ஆயிரத்து 675 ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஸ அரசாங்கம் பதவியில் இருந்து அப்புறப்படுத்தப்படும் வரை ராஜபக்ஸ குடும்பத்தினர் அரச ஊடகங்களை தமது பிரச்சார நிறுவனங்களாக பயன்படுத்தி வந்தனர்.
இதனால், குறித்த அரச நிறுவனம் உட்பட மேலும் பல அரச ஊடகங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான தேர்தல் விளம்பரங்களை குறித்த அரச தொலைக்காட்சி நிறுவனம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.