இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான முத்தைய்யா முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக பணி புரியும் சேவையினை இன்று(25) முதல் நிறுத்திக்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டிகள் முடியும் வரைக்கும் வேகப்பந்துவீச்சு குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோரியும் அதனை தாம் இப்போது மறுப்பதாக மதியம் முரளிதரன் தனது சமீபத்திய சகாக்களிடம் கூறியுள்ளார்.
இன்னும், முத்தைய்யா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இது குறித்து இன்று மதியம் நெடு நேரம் பேச்சுவார்த்தையில் இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முத்தைய்யா முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பந்து வீசுவது குறித்தான ஆலோசகர் பதவி குறித்து இற்றைய நாட்களில் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.