பசிலின் பிணை மனு விசாரணை, சட்டமா அதிபர்மற்றும் FCID க்கு நீதிமன்ற அழைப்பாணை

திவி நெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும், சட்டமா அதிபருக்கும் நிதிக் குற்றப் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரிக்கும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது