கொழும்பு லோட்டஸ் வீதி இன்று இரண்டரை மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி தொடக்கம் 9.30 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் ஆரம்பமாகும் சைக்கிள் சவாரியினால் இவ்வாறு மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோட்டஸ் வீதியில் ஆரம்பமாகும் சைக்கிள் சவாரியானது பரோன் ஜயதிலக மாவத்தை, செத்தம் மாவத்தை, செரமிக் சந்தி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், டுப்ளிகேசன் வீதி, சரணங்கர மாவத்த, காலி வீதியுடாக குறித்த சைக்கிள் சவாரியானது மாத்தறை வரை பயணிக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.