12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர்.

12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு இன்று இந்தோனேசியாவில் ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி வரையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
உலக நாடுகள் பலவற்றின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைவர்கள் கலந்து கொள்ளும் குறித்த இம்மாநாட்டில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் இந்தோனேசியாவுக்கு பயணித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாநாட்டுக்கு மேலதிகமாக, இந்தோனேசியாவின் ஜனாதிபதியையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.