இலங்கை மற்றும் சிம்பாபே அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிற்கு மாற்றமாக மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடாத்துவதற்கு சிம்பாபே கிரிக்கட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நிதி நெருக்கடியை எதிர் நோக்கும் சிம்பாபே கிரிக்கெட் நிர்வாக சபையிற்கு, டெஸ்ட் போட்டியில் இலாபம் பெறுவது கடினமான காரியமாகையினால், குறித்த தீர்மானம் எட்டப்படுவதற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய, இலங்கை அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டியை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி ஒக்டோபர் மாதம் சிப்பாபேயிற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.