தகவல் அறியும் சட்டமூலத்திற்கு சபாநாயகரால் பச்சை சமிஞ்சை

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.