அரசாங்கத்தின் மொத்த வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்வு – நிதி அமைச்சு

இவ்வருடத்தின் முதல் நான்கு மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் மொத்த வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தவகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 47268.9 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நான்கு மாத காலத்துக்குள் இந்த வருமானம் 39521.1 கோடி ரூபாவாக காணப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இவ்வருட முதல் நான்கு மாத காலத்துக்குள் 7747.8 கோடி ரூபா கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாக பெற்றுள்ளது. இந்த அதிகரிப்பானது 19.6 எனவும் நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.