பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, அந்த இடத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவை நியமிக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, சமல் ராஜபக்ஸவை பிரதமராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் உள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் சபாநாயகர் இல்லத்தில் வைத்து இரண்டு மணித்தியாலங்கள் அதுரலிய ரதன தேரர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திலிருந்து, ரதன தேரர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார். ஏற்கனவே பசில் ராஜபக்ஸவையும் சிறையில் சந்தித்து ரதன தேரர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை அரசியலில் களமிறக்குவதிலும் ஜாதிக ஹெல உறுமய தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.