ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (04) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இன்று இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியில் கலந்து கொண்ட ஸ்ரீ ல.சு.கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான அவசர சந்திப்பொன்றை கடந்த 02 ஆம் திகதி ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.