துருக்கி – ஜேர்மன் உறவில் மீண்டும் விரிசல் நிலை.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசா இன்றி துருக்கியர்களை அனுமதிப்பதற்காக துருக்கி ஐரோப்பாவை மிரட்டிப் பணியவைக்க முயலக் கூடாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்குள் குடியேறிகள் வந்து குவிவதை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் இருந்து தாம் பின்வாங்கப்போவதாக துருக்கி கூறியதை அடுத்தே ஜெர்மனியின் இந்த பதில் வெளியாகியுள்ளது.

துருக்கியில் தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து ஜெர்மனிக்கும் துருக்கிக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரித்து வருவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.