குருநாகல் ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம் – மஹிந்த

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அழைப்பு கடிதங்களுக்கு தீ வைத்த குருநாகல் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை உறுப்பு பதவிகளிலுருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இரவு ஐனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சி மற்றும் கட்சி தலைமைத்துவத்தை விமர்சிப்பவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது