புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றி, கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இரவு ஐனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சி மற்றும் கட்சி தலைவரை ஏற்றுக் கொள்வதில்லை என சனத் நிஷாந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.