2வது டெஸ்டில் ஹேரத் ஹெட்ரிக் சாதனை (UPDATE)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த டெஸ்டில் சற்று முன்னர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனையினை கைப்பற்றியுள்ளார்.

முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 08 விக்கட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

இரண்டாம் நாளான இன்றைய போட்டியின் போதே ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=n918Af0YuG8″ width=”560″ height=”315″]