நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும அரசாங்கத்தில் இணைய வாய்ப்புள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சுட்டுக்கொலை செய்யப்போவதாக மிரட்டினாலும் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியுடன் தென் கொரியா சென்றுள்ள டளஸ் அழகப்பெரும அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.