பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி குறித்த கோப் அறிக்கை இருவாரங்களில்..

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பொது முயற்சியான்மை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் இரண்டு வார காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சுனில் ஹந்துனெத்தி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கோப் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோப் ஆணைக்குழுவின் விசாரணைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது எனவும், இது தொடர்பில் ஓர் முறைமை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பதவி வகித்த காலத்தில் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து கோப்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள எதிர்வரும் இரண்டு வாரங்களில் இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கபடும் என சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.