முன்னாள் அமைச்சர் பசில் இனது வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய அனுமதி.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பூகொட நீதவான் இந்த அனுமதியை நேற்று வழங்கியுள்ளார்.
மல்வானை பிரதேசத்தில் காணி ஒன்றை 64 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்து, அதில் 125 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நிமித்தம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.