தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மில் சற்றுமுன்னர் கோட்டை நீதிமன்றத்தால் 25 ஆயிரம் காசுப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த மாதம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு ஆஜராகியிருந்த வேளை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.