எதிர்வரும் மாதங்களில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருக்கு மற்றும் அமைச்சின் செலவுகளுக்கு அமைச்சர் பொன்சேகா 59 கோடி 29 இலட்ச நிதியினை அரசிடம் கோரியுள்ளார்.
இதற்கான மனுவானது ஜுன் மாதம் 28ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஜுலை 12 ஆம் திகதி இதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதேச அமைச்சின் மூலதன செலவுகள் உள்ளிட்டவைக்கே, இந்த நிதி அமைச்சரால் கோரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பாராளுமன்றில் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.