வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகரிடமிருந்து விசேட உரை.

வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட உரை ஒன்றினை நிகழ்த்தவுள்ளார்.

வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச திருத்த சட்டமூலத்தை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பானது நாடாளுமன்றின் அதிகாரங்களுக்கு ஏதேனும் வகையில் தாக்கம் செலுத்தியதா என்பது குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய, கருத்து வெளியிட உள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது இது குறித்து சபாநாயகர் கருத்து வெளியிட உள்ளார் என நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.