முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள கம்பஹா மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் இரு காணிகளை அரசுடமையாக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு அரசுடமையாக்கப்படும் காணியில் அரச நிறுவனங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த இரு காணிகளுக்கும் யாரும் உரிமை கோராததனாலேயே இதனை அரசுடமையாக்கப்படுகின்றது. 7 ஏக்கர் கொண்ட கம்பஹா காணியில் பொலிஸ் பயிற்சி நிலையமொன்றை அமைக்கவும், மாத்தறை காணியில் சுற்றுலாத்துறைக்கு பயிற்றுவிக்கும் மத்திய நிலையமொன்றை அமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் நேற்று(10) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.