முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதிவரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

தனது மனைவியுடன் சிங்கபூர் செல்வதற்கு ஜோன்ஸ்டன், நீதிமன்றத்தின் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.