முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள விடயம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் ஆகியோருக்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பணித்துள்ளார்.

இந்த தகவலை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று பகல் நடைபெற்றது.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும், அதனால் அவர்களில் சிலர் நோய் ஏற்பட்டு மரணித்திருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான அவசியத்தையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வலியுறுத்தியிருந்தனர்.