இந்த ஆண்டில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானமுமில்லை.

2016ம் ஆண்டான இந்த ஆண்டில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அதன் தலைவர் கே.அன்சார் கூறியுள்ளார்.

ஒவ்வொரு 3 வருடத்துக்கும் ஒரு முறை நீர் கட்டணத்தை உயர்த்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக நீர் கட்டணத்தை அதிகரிக்க முடியாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது